திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனை புற்றுநோய் மற்றும் மல்டி ஸ்பெஷலிஸ்ட் மற்றும் ரோஸ் கார்டன் இலவச அறக்கட்டளை இணைந்து புற்றுநோயிலிருந்து குணமடைந்தோருக்கான சந்திப்பு நிகழ்ச்சி திருச்சி நாகமங்கலத்தில் உள்ள ஹர்ஷமித்ரா மருத்துவமனையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஹர்ஷமித்ரா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக திருச்சி சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் முதல்வரும் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் துளசி மற்றும் மணப்பாறை பாலாஜி மருத்துவமனை இயக்குனர் மகப்பேறு மருத்துவர் மென்மொழி மற்றும் மணிகண்டம் சர்வேஸ் செவிலியர் கல்லூரி செயலாளர் சகோதரி சகாயமேரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக கலைமாமணி டப்பிங் கலைஞர் நடிகை நித்யா ரவிச்சந்திரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் புற்று நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தங்களது அனுபவங்களை இந்த நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டனர். மேலும் இந்த பிங்க் அக்டோபரில் மார்பக புற்றுநோயை தடுக்கும் வகையில் ஆரம்பகட்ட நிலையிலேயே கண்டறியும் பரிசோதனைகளான மேமோகிராம் தெர்மோகிராம் சோனோகிராம் ஆகிய மூன்று கிராம் என்ற வாசகத்தோடு பெண்களை ஊக்கப்படுத்தும் வகையில் ரூ 999 சலுகை விலையில் சிகிச்சை முறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் மற்றும் புற்று நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அஷ்மித்ரா மருத்துவமனை செயல் இயக்குனர் மருத்துவர் சசி பிரியா செய்திருந்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்