புனித வின்சென்ட் தே பவுல் சபையின் 50வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, இந்திய ஒன்றிய மருத்துவம் மற்றும் திருச்சி மாவட்ட ஓமியோபதி சித்த மருத்துவ துறையுடன் இணைந்து 33வது வார்டு தெரசம்மாள்புரம் பங்கு ஆலய வளாகத்தில் இன்று காலை இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது.
இவ்விழாவில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிக்கோ இருதயராஜ் கலந்து கொண்டு பொன் விழா மற்றும் அரசு இலவச சித்த மருத்துவ முகாமை துவக்கி வைத்து பேசுகையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாரம்பரிய தமிழ் மருத்துவத்திற்கு மீண்டும் உயிர் கொடுத்து தமிழக மக்களின் உயிரை காக்கும் வகையில் அதற்கான துறைக்கு பெரிய அளவிலான நிதி ஒதுக்கி கொரோனா காலத்தில் மக்களின் உயிரைக் காப்பதில் குறிப்பிடும் அளவிலான பங்கு வகித்த சித்த மருத்துவத்தை உணவே மருந்து மருந்தே உணவு என்ற தத்துவத்தின் அடிப்படையில் தமிழகமெங்கும் முகாம்கள் அமைத்து அனைத்து நோயிலும் போராடி மக்களை காக்கும் இம்முயற்சியை விளக்கி,
மக்களைத் தேடி அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று மருத்துவ உதவிகளை செய்திடும் நோக்கில் செயல்படும் வகையில் மக்களைத் தேடி தமிழ் மருத்துவத்தை கொண்டு செல்லும் வகையில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில் 2 லட்சம் ரூபாய்க்கும் மேலான நோய் எதிர்ப்பு மருத்துவ சூரணங்கள் மாத்திரைகள் போன்றவற்றை கட்டணம் இல்லாமல் அனைவருக்கும் இலவசமாக கொடுத்து மக்களை கொரோனா, பருவமழை மற்றும் இயற்கையின் கால மாற்ற சூழ்நிலைகளில் இருந்து காக்க எடுக்கப்படுகின்ற இந்த முயற்சியை அனைவரிடமும் கொண்டு செல்ல வேண்டும் என்று வேண்டுகோள்விடுத்து, தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு எப்படிப்பட்ட இயற்கைப் பேரிடர்கள் வந்தாலும் அதை எதிர்கொண்டு மக்களை காத்திட எடுக்கின்ற முயற்சிகளுக்கு அனைவரும் உறுதுணையாக இருந்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மருத்துவர் காமராஜ், சபையின் தலைவர் முனைவர்.மெட்டில்ட்டா, தெரசாள்புரம் பங்குத்தந்தை அருட் திரு. அன்புராஜ், முன்னாள் மாமன்ற உறுப்பினர் லீலா வேலு, கலைஞர் நகர் பகுதி பொறுப்பாளர் மணிவேல், வட்ட கழக செயலாளர்கள் பண்ணை ராஜேந்திரன், எடிங்டன், மற்றும் கழக நிர்வாகிகள் கழக தோழர்கள் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எடத்தெரு பிறகும் அந்த பகுதியில் அப்பகுதி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை பெரும் முகாம் இன்று நடந்தது. இந்த முகாமில் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் பெற்றுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில்:- இதுவரை வாங்கப்பட்ட மனுக்களை எனது நேரடி பார்வையில் தனியாக குழு அமைத்து, முதியோர் ஓய்வூதியம், கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகள், போன்றவைகளை துறை வாரியாக பிரித்து அதற்கான மேல் நடவடிக்கைக்கு பரிந்துரை செய்து தகுதியான அனைவருக்கும் அனைத்து சலுகைகளும் கிடைக்க நிச்சயமாக பாடுபடுவேன்என்றும், மேலும் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு கோரி கொடுத்த மனுக்களுக்கும் தீர்வு காண்பதற்கு நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவித்தார். இம்முகாமில் பகுதி கழக பொறுப்பாளர் ராஜ் முகமது, வட்ட கழக செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.