திருச்சி மாநகராட்சி 46 வது வார்டு பகுதிக்கு உட்பட்ட வ.உசி தெரு, மெயின் ரோடு, வார்டன் லயன் பஸ் நிறுத்தத்தின் அருகில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு இரண்டு வாரம் மேலாக 24 மணி நேரமும் தண்ணீர் வீணாக சாக்கடையில் கலக்கிறது. மேலும் இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்து எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மேலும் அப்பகுதியில் தண்ணீர் தேங்கி நின்று அதில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதியில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட திருக்கி மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் சக்தி இயக்கம், மற்றும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *