திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதம் மருத்துவ கல்லூரியுடன் இணைந்து மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 6 வயதுக்குட்பட்டோருக்கான இலவச காது கேளாமை பரிசோதனை மற்றும் காக்ளியர் இன் பிளான்ட் கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் கலந்து கொண்டு குழந்தைகளுக்கான அதிநவீன காது மூக்கு தொண்ட சம்பந்தமான மருத்துவ உபகரணங்களை பார்வையிட்டு முகாமை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு காது கேளாமையால் வரும் குறைபாடுகள் குறித்தும் அதனை நிவர்த்தி செய்யும் வழிமுறைகள் குறித்தும் மருத்துவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் எடுத்துரைத்தனர்.
இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் முதல்வர் குமரவேல், மருத்துவ கண்காணிப்பாளர் உதய அருணா, துணைக் கண்காணிப்பாளர் அருண்ராஜ், மருத்துவ கண்காணிப்பாளர் ஜெயபாரதி மற்றும் காது மூக்கு தொண்டை மருத்துவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் காது மூக்கு தொண்டை திறன்கள் பற்றி அறிந்து கொண்டு குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.