திருச்சி புத்தூர் பகுதியில் உள்ள YMCA மழலையர் துவக்கப் பள்ளியில், திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ₹.50 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட குழந்தைகள் விளையாட்டு மையம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
இதில் பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு குழந்தைகள் விளையாட்டு மையத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் பள்ளியின் பொது செயலாளர் பர்ணபாஸ், தாளாளர் டாக்டர் மார்டின், பொருளாளர் ரெக்ஸ், தலைமை ஆசிரியர் ஷீலா செலஸ், துணை தலைவர் நோபுள் ரிச்சர்ட், ஸ்போர்ட்ஸ் சேர்மன் தாமஸ், பொறியாளர் கண்ணன் உள்பட பள்ளி குழந்தைகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.