திருச்சி திருவானைக்கோவில் அக்ரஹாரம் பகுதியில் வசித்து வருபவர் ரேணுகா இப்பகுதியில் பானி பூரி தள்ளுவண்டி கடை நடத்தி வருகிறார் இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தள்ளுவண்டி கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றவர் நேற்று மீண்டும் கடையை திறக்க வந்தபோது அங்கு தள்ளுவண்டி கடை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அதன் அடிப்படையில் போலீசார் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது அதே பகுதியை சேர்ந்த கணவன் மனைவி ஆகியோர் ரேணுகாவின் தள்ளுவண்டி கடையை தள்ளிக் கொண்டு செல்வது பதிவாகி இருந்தது இது குறித்து ரேணுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார் ஆனால் புகாரை காவல்துறையினர் பெறாமல் தள்ளு வண்டியை திருடி சென்றவர்களுக்கு சாதகமாக பேசுகின்றனர் எனக் கூறி திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமனிடம் புகார் மனு அளிக்க வந்தார்.
இதுகுறித்து ரேணுகா கூறுகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக என் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்க சென்றேன் எனது புகாரை பெறாமல் என் மீது வழக்கு போடுவதாக காவல்துறையினர் மிரட்டல் விடுத்தனர். இது சம்பந்தமாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் புகார் புகார் அளித்தேன் அதை மனதில் வைத்துக்கொண்டு இன்று எனது தள்ளுவண்டியை திருடியவர்களுக்கு சாதகமாக காவல்துறையினர் செயல்படுகின்றனர் இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். இனியும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வேன் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.