திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா இன்று மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் பேசுகையில்:-
பெரம்பலூரில் இருந்து சத்திரம் பேருந்து நிலையத்திற்க்கு 12ம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் பணியாற்றி வந்த ராணுவ வீரர் மற்றும் அவரது மனைவி வருகை தந்த போது பையில் மூன்று லட்சம் பணமும் 27 சவரன் நகையும் எடுத்து வந்துள்ளனர். கடையில் ஜூஸ் குடித்து விட்டு
சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள கடைக்கு சென்று பார்த்தபோது அவர்களது பையில் இருந்த நகை திருட்டுப் போய் இருப்பது தெரிய வந்தது – இதனை உடனடியாக கோட்டை காவல் இடத்தில் புகார் அளித்தனர். இதனை அடுத்து இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தொடர்ந்து சத்திரம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர் –
இதில் சம்பந்தப்பட்ட திருடர் ஒருவரை மதுரையில் கைது செய்தோம், இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக மேலும் இரண்டு பேரை தொடர்ந்து தேடி வருகிறோம். 27 சவரன் நகையில் தற்போது 23 சவர நகை மீட்கப்பட்டுள்ளது. தொடர் திருட்டு சம்பவங்களை தடுப்பதற்காக சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையத்தில் கூடுதலாக காவல்துறையினர் தற்போது பணியில் உள்ளனர். திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய ரவி என்பவரை தற்போது கைது செய்துள்ளோம் மேலும் இரண்டு பெண்களை கைது செய்ய உள்ளோம்.
திருச்சி மாநகரப் பொருத்தவரை தற்போது 1600 கண்காணிப்பு கேமராக்கள் முக்கிய இடங்களில் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது கூடுதலாக 2000 கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்துவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். குற்ற சம்பவங்கள் அதிகம் நடைபெறக்கூடிய பகுதி என்று ஆய்வு செய்துள்ள பகுதிகளில் அதிகமான கண்காணிப்பு கேமராக்களை பொருத்த உள்ளோம் – மாவட்ட ஆட்சியரிடம் இது தொடர்பாக கோரிக்கையை முன் வைத்துள்ளோம் விரைவில் மாநகரின் பல்வேறு இடங்களில் புதிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.