தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் திருநங்கைகளின் ஆதார் அட்டை , வாக்காளர் அடையாள அட்டை, மருத்துவ காப்பீட்டு அட்டை, குடும்ப அட்டை, திருநங்கைகள் நல வாரிய அடையாள அட்டை, அகியவைற்றை தமிழக அரசு அறிமுக படுத்தியுள்ள திருநங்கைகளுக்கான இணையதளம் கைபேசி செயலியில் விவரங்களை பதிவு செய்யவும் பெயர் மற்றும் முகவரி திருத்தம் புதிதாக நலவாரிய அடையாள அட்டை பெற்றிடவும் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது.
இம்முகாமினை திருச்சி மாவட்ட சமூகநலத்துறை அதிகாரி தமிமுன்நிஷா தொடங்கி வைத்தார். இம்முகாமில் பல்வேறு அரசு துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு திருநங்கைகளுக்கு தேவையான ஆவனங்களை பெற நடவடிக்கை எடுத்தனர்.
மேலும் இச்சிறப்பு முகாமில் மாவட்ட தொழில் மையம் சார்பில் தொழில் முனைவோர் வழிகாட்டுதல் மற்றும் கொரோணா தடுப்பூசி செலுத்தி கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இம்முகாமில் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் சமூக ஆர்வலருமான ஆர்.ஏ தாமஸ் ஒருங்கிணைப்பில் தன்னார்வலர்கள் அல்லிகொடி அனுஷ்மா நந்தினி
புதியபாதை அறக்கட்டளை நிர்வாகிகள் ஹேமலதா, தீபலட்சுமி, அருணாசலம் St.ஜோசப் கல்லூரியை சேர்ந்த Nss மாணவர்கள் அஸ்வின் சைமன் கிருஸ்டோபர், ஜோய் ஜீனேஷ் விமல்ராஜ் பாலமுருகன், ரிஸிகேஷ் தனுஷ் ஆதித்யா,மற்றும் நல்உள்ளங்கள் அமைப்பை சேர்ந்த தன்னார்வலர்கள் முகாமில் கலந்து கொண்டு களப்பணியாற்றினர் முகாமில் கலந்து கொண்ட திருநங்கைகளில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 திருநங்கைகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.