திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. அதனையொட்டி திருச்சி மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் சார்பில் பல்வேறு இடங்களில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் முதியோருக்கு அன்னதானங்கள் வழங்கப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி வயலூர் ரோடு ராமலிங்க நகர் பகுதியில் உள்ள பூங்காவில் துப்புரவு பணியாளர்களுக்கு மதிய உணவை காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் என்ஜினியர் பேட்ரிக் ராஜ்குமார் தலைமையில்
திருச்சி 24-வது வார்டு கவுன்சிலர் சோபியா விமலா ராணி வழங்கினார். அருகில் காங்கிரஸ் நிர்வாகிகள் சரவணன், பிரியங்கா பட்டேல் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.