திருச்சி திருவானைக்கோவில் ட்ரங் ரோடு மற்றும் கன்னிமார் தோப்பு ரோடு மையத்தோப்பில் 56 எண்கள் கொண்ட 150 வாட்ஸ் திறன் கொண்ட ஹெரிடேஜ் வகையிலான எல்இடி மின்விளக்குகள் அமைக்கும் பணி ரூபாய் 88.75 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது.
இதனை இன்று தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு திறந்து வைத்தார்.இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, அதிகாரிகள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.