திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், அன்பில் கிராமத்தில் ஆச்சிராம வள்ளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் அந்த பகுதியை சுற்றியுள்ள ஜங்கம ராஜபுரம், மங்கம்மாள்புரம்,கீழ அன்பில் ஆகிய மூன்று கிராமங்களை சேர்ந்த மக்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இங்கு ஆண்டுதோறும் மாசி மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இவ்வண்டு இன்று (திங்கட்கிழமை ) இக் கோவிலில் காப்பு கட்டுதல் நடைபெறும்.ஆனால் கோவில் திருவிழாவை நடத்த லால்குடி ஆர்டிஓ பல்வேறு காரணங்களை கூறி அனுமதி மறுத்துள்ளார்.அதைத்தொடர்ந்து கிராம மக்கள் இன்று திருச்சி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர்.
இதுகுறித்து அன்பில் பொதுமக்கள் கூறுகையில், ஆண்டாண்டு காலமாக முந்தைய வழக்கப்படி சாமி திருவீதி உலா நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஒரு சமூகத்தினர் தங்களது தெருவுக்கும் திருவீதி உலா அழைத்து வர வேண்டும் என நீதிமன்றத்தை நாடினர். ஆனால் நீதிமன்றம் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறையும் கோவில் திருவிழாவை நடத்த அனுமதி அளித்துள்ளது இந்த நிலையில் RDO கோவில் விழாவை நடத்த அனுமதி மறுத்து வருகிறார்.தன்னிச்சையாக செயல்படும் அவரை இடமாற்றம் செய்து புதிய ஆர்டிஓ நியமித்து திருவிழா நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.