திருச்சி எஸ் ஆர் சிகல்லூரி அருகே உள்ள திருச்சி தஞ்சை புதுக்கோட்டை காயிதே மில்லத் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் 2023-2024-ம் ஆண்டுக்கான தலைவர், உதவித் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் செயற்குழுவிற்கு போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு இன்று காலை நடைபெற்றது,
இந்த தேர்தலில் திருச்சி தஞ்சை புதுக்கோட்டை காயிதே மில்லத் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் 218 பேர் வாக்கு அளித்தனர். நடந்து முடிந்த வாக்கெடுப்பில் அதிகமாக வாக்குகள் பெற்று தலைவராக கணேஷ் குமாரும், துணைத் தலைவராக திருச்சி அதிமுக 14வது வார்டு மாமன்ற உறுப்பினர் அரவிந்தன்,செயலாளராக பாலன், இணைச்செயலாளராக பழனியப்பன்,பொருளாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். துணைத் தலைவர் அரவிந்தன் அவர்களுக்கு நிர்வாகிகள் சால்வை, மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனா்.
குறிப்பாக தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை அடுத்து கடந்த நான்கு வருடங்களாக திரைப்பட விநியோசர்கள் சங்க தேர்தல் நடைபெறாமல் இருந்தது இந்நிலையில் இந்த வருடம் நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்று புதிய நிர்வாகிகளாக பொறுப்பேற்றவர்களுக்கு சங்க உறுப்பினர்கள் சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து நாளை காலை புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.