திருச்சி வயலூர் ரோடு சீனிவாசா நகர் ரிலையன்ஸ் ஸ்மார்ட் அருகில் உள்ள தில்லை மெடிக்கல் சென்டர் மல்டி ஸ்பெஷாலிட்டி கிளினிக் மற்றும் எஸ் எம் எஸ் லாரி சர்வீஸ் இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம் திருச்சி எடத்தெரு ரோடு, ஸ்ரீ ராமகிருஷ்ணா மில் அருகில் இன்று நடைபெற்றது.
இந்த சிறப்பு மருத்துவ முகாமில் எலும்பு அடர்த்தி பரிசோதனை, சர்க்கரை நோய் இரத்த பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனை மற்றும் ரத்தத்தின் ஆக்சிஜன் அளவு கண்டறியும் பரிசோதனை, எலும்பு முறிவு, மூட்டு வலி, பொது மருத்துவம், சர்க்கரை நோய், நுரையீரல் நோய், தோல் நோய், காது, மூக்கு, தொண்டை சிகிச்சை பிசியோதெரபி மற்றும் பொது மருத்துவத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த இலவச மருத்துவ முகாமில் எலும்பு முறிவு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ரோஷன் ராஜ், பொதுநல மருத்துவர் ஞானசேகரன், பொது மற்றும் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் ராமநாதன், தோல் நோய் சிறப்பு மருத்துவர் டாக்டர் விக்னேஷ் குமார், நுரையீரல் நோய் சிறப்பு மருத்துவர் அனுசுயா மற்றும் காது மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவர் அழகம்மை ஆகியோர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.
மேலும் நோயாளிகளுக்கு மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகள் வழங்கப்பட்டது . இந்த மருத்துவ முகாமில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சைகள் மற்றும் பரிசோதனை மேற்கொண்டனர். அறுவை சிகிச்சை தொடர்பாக ஆலோசனைகள் மற்றும் மேல் சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.