தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருச்சியிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் நலன் கருதியும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டும், திருச்சி மாநகரில் தஞ்சாவூர் மார்க்கம், புதுக்கோட்டை மார்க்கம் மற்றும் மதுரை மார்க்கம் ஆகிய வழித்தடங்களில் செல்லும் பேருந்துகளுக்காக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையங்களில், மன்னார்புரம் சர்வீஸ் ரோட்டில் தொடங்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தை திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் காமினி திறந்து வைத்தார். திருச்சி மாநகரில் பாதுக்காப்பு நடவடிக்கைகள்.. NSCB ரோடு தெப்பக்குளம் அருகில் தற்காலிக காவல் உதவி மையம் (Temporary Police Out-Post) அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையங்களில் பொது அறிவிப்பு மையம் (Public Address System) மற்றும் மன்னார்புரம் தற்காலிக பேருந்து நிலையத்தில் 16 CCTV கேமராக்களும், சோனாமீனா தியேட்டரில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் 2 CCTV கேமராக்களும், சத்திரம்பேருந்து நிலையத்தில் 102 CCTV கேமராக்களும், மத்திய பேருந்து நிலையத்தில் 44 CCTV கேமராக்கள் உட்பட ஆக மொத்தம் 152 CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டும் சட்ட ஒழுங்கு காவலர்கள், குற்றப்பிரிவு காவலர்கள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் உட்பட திருச்சி மாநகரத்தில் சுமார் 1059 காவலர்கள் பாதுகாப்பு பணியில் பணியமர்த்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், திருச்சி மாநகரத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, மாநகர காவல் ஆணையர் அவர்கள் கீழ்கண்ட வழிமுறைகளை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்:
தேசிய நெடுஞ்சாலையில் எக்காரணத்தை கொண்டும் எவ்வித வாகனங்களையும் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தக்கூடாது. பேருந்துகளை அதற்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிறுத்தத்தில் மட்டுமே நிறுத்தி பயணிகளை இறக்கி, ஏற்றவேண்டும். போக்குவரத்து சிக்னல்களில் பயணிகளை இறக்கி, ஏற்றக் கூடாது. வேன்கள், கார்கள் மற்றும் ஆட்டோக்களை அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில்தான் நிறுத்தவேண்டும். போக்குவரத்துக்கு இடையூறாகவும், சாலையோரங்களிலும் நிறுத்தக்கூடாது. வியாபாரிகள் மற்றும் தரைக்கடை வியாபாரிகள் போக்குவரத்து மற்றும்பொதுமக்களுக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்து கடைகளை அமைத்து விற்பனை செய்யக் கூடாது.
பட்டாசு வியாபாரம் செய்பவர்கள், அனுமதி பெற்ற இடத்தில் மட்டும்தான் விற்பனை செய்யவேண்டும். தரைக்கடை மற்றும் தள்ளுவண்டியில் வைத்து பட்டாசுகளை விற்பனை செய்ய கூடாது.மேற்படி விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் இது பற்றிய தகவலை காவல் கட்டுப்பாட்டு அறை எண்:100-க்கும் மற்றும் மாநகர காவல் ஆணையர் அவர்களது அலுவலக Whatsapp No: 9626273399 என்ற எண்ணுக்கும் தகவல் தெரிவிக்கலாம் கூறப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு NSCB சாலையில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை கீழ்கண்ட வாகன நிறுத்துமிடங்களில் மட்டும் வாகனங்களை நிறுத்த வேண்டும் :
பழைய குட்செட் சாலையில் FSM அருகில் உள்ள (கோட்டை இரயில் நிலையம்) இரயில்வே மைதானத்தில் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தவேண்டும். மெயின்கார்டுகேட் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தவேண்டும். சிங்காரதோப்பு செல்லும் வழியில் பூம்புகார் விற்பனை நிலையத்திற்கு அருகில் உள்ள யானைக்குளம் என்ற இடத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்தவேண்டும். பெரியகடை வீதி வழியாக வரும் வாகனங்களை கிலேதார் சாலை வழியாக சென்று கீழப்புலிவார் சாலையில் நிறுத்திவிட்டு வரவேண்டும். நந்திகோயில் வழியாக வரும் பொதுமக்களின் வாகனங்களை பட்டர்வொர்த் சாலையில் நிறுத்திவிட்டு வரவேண்டும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டும், பயணிகளின் நலன் கருதியும் திருச்சி மாநகரில் 09.11.2023ம்தேதி முதல் 14.11.2023ம்தேதி வரை தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் மதுரை மார்க்கமாக செல்லும் அனைத்து பேருந்துகளும் கீழ்கண்ட தற்காலிகப் பேருந்து நிலையங்களிலிருந்து இயக்கப்படவுள்ளது.