தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுப் பிரியர்கள் மற்றும் வாலிபர்கள் மது குடிப்பது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் 5 வெளி நாட்டு சரக்குடன் கூடிய மதுபான விற்பனை கூடங்கள் உட்பட 161 டாஸ்மாக் சில்லறை கடைகள் உள்ளன. இதில் 105 கடைகள் பார்களுடனும், இதர கடைகள் பார் இல்லாமலும் இயங்கி வருகின்றன. மேலும் கலால் துறை மூலமாக இயங்கும் 12 மன மகிழ் மன்றம், 32 ஹோட்டல்களில் அனுமதிக்கப்பட்ட மதுபான விடுதிகள் இயங்கி வருகின்றன.இங்கு டாஸ்மாக் மதுபான கடைகள் மூலமாக மட்டும் நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ. நான்கரை கோடிக்கு மதுபானம் விற்பனையாகி வருகிறது. இதில் விழா காலங்களில் கூடுதலாக மது விற்பனையாகும் அந்த அடிப்படையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 10,11, 12 ஆகிய 3 தேதிகளில் ரூ. 25 கோடிக்கு மதுபானம் விற்பனையாகியுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறும் போது, வழக்கமாக சனிக்கிழமை சுமார் 5 கோடிக்கு மதுபானம் விற்பனையாகும். அதேபோன்று ஞாயிற்றுக் கிழமைகளில் ஐந்தரை கோடி முதல் 6 கோடி வரை விற்பனை இருக்கும்.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த 3 நாட்களில் கூடுதலாகரூ.9 கோடி அளவுக்கு மதுபானம் விற்பனை யாகியுள்ளது என்றார்.இதில் பீர் பாட்டில்கள் அதிக அளவு விற்பனையாகியுள்ளது.ஆகவே விழாக்காலங்களில் மது அருந்தும் இளைஞர்கள் அதிகம் தீர்கள் வாங்கி இருக்கலாம் என கருதப்படுகிறது. இதேபோன்று திருச்சி மாநகரில் உள்ள மனமகிழ் மன்றம், எலைட், ஓட்டல்களில் ஒருங்கிணைந்த பார்கள் ஆகியவற்றிலும் பல கோடிக்கு மதுபானம் விற்பனையாகியுள்ளது.