திருச்சி மாவட்ட தீயணைப்பு மீட்பு பணிகள் துறையுடன் பல்வேறு சமூக நல அமைப்புகள் இணைந்து குழந்தைகள் பொதுமக்கள் பாதுகாப்பாக தீபாவளி திருநாளை கொண்டும் வகையில் தீ தடுப்பு விழிப்புணர்வு துண்டறிக்கை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு செய்தனர். இந்நிகழ்வு திருச்சி மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள கோட்ட தீ தடுப்பு மீட்புப் பணிகள் துறை அலுவலகம் வளாகத்தில் திருச்சி மாவட்ட தீயணைப்பு மீட்பு துறையின் திருச்சி மாவட்ட அலுவலர் அனுசியா உத்தரவின் பேரில் அலுவலக சிறப்பு நிலை அலுவலர் மைக்கேல் அலுவலக சிறப்பு நிலை அலுவலர் ஜீவா ஆகியோர் முன்னிலையில் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் தன்னார்வலரும் முன்னாள் ரயில்வே ஊழியருமான சீனிவாச பிரசாத் அவர்களின் 30 ம் ஆண்டு வாகன விழிப்புணர்வு தொடங்கி வைக்கப்பட்டது இந்நிகழ்வில் பல்வேறு சமூக நல அமைப்புகளின் நிர்வாகிகள் ஸ்ரீரங்கம் விவேகானந்தா யோகா மையத்தின் நிர்வாகி யோகா ஆசிரியர் ஸ்ரீதர் மற்றும் சந்தான கிருஷ்ணன் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் குடிமக்கள் நல சங்கத்தின் தலைவர் கோவிந்தராஜ் ஓயிட் ரோஸ் பொதுநல சங்க தலைவர் சங்கர், ஸ்ரீரங்கம் மக்கள் நல சங்கத்தின் தலைவர் மோகன் ராம் தேசி விருது பெற்ற குறும்படத்தின் நடிகரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியுமான ஆர்.ஏ.தாமஸ் சமூக ஆர்வலர் கோவிந்தசாமி சமூக ஆர்வலர் எழில் ஏழுமலை விலங்குகள் நல ஆர்வலர் ராகவன் நேரு யுவகேந்திரா கணக்காளர் மகேஷ்வரன் உள்ளிட்டோர் மற்றும் தீயணைப்பு துறை ஊழியர்கள் வெடிக்காத மாதிரி பட்டாசுகள் உடன் கலந்து கொண்டு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நீதிமன்ற பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் வணிக வளாகம் மற்றும் வாகனம் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்த பொதுமக்களுக்கு தீப ஒளி திருநாளில் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்தும், தீ தடுப்பு குறித்தும், தீ விபத்தில் பாதிக்கப்பட்டால் அவர்களை எப்படி மீட்பது மற்றும் முதலுதவி சிகிச்சை அளிப்பது எப்படி என்பதை விளக்கும் விழிப்புணர்வு துண்டறிக்கைகளை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர் இதனை தொடர்ந்து சமூக ஆர்வலர் சீனிவாச பிரசாத் அவர்கள் திருச்சி மாவட்ட நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தனது 2 சக்கர வாகனத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பயணத்தை தொடங்கினார்*