திருச்சி மாநகர் மாவட்ட பாஜக சார்பில் பஹல்காமில் அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கும் பாகிஸ்தானை கண்டித்து திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகாமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக மாநகர் மாவட்ட தலைவர் ஒண்டிமுத்து தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் அணி மாநில பொதுச்செயலாளர் கௌதம் நாகராஜன் , முன்னாள் மாவட்ட தலைவர்கள் வரகனேரி பார்த்திபன் , ராஜேஷ் குமார், மாவட்டத் துணைத் தலைவர் கள்ளிக்குடி ராஜேந்திரன், லீமா சிவக்குமார், மாவட்ட பொதுச் செயலாளர் காளீஸ்வரன், நாகேந்திரன், மாநில வர்த்தக அணி செயலாளர் எம் பி முரளிதரன், கூட்டுறவு பிரிவுஎம்பயர் கணேஷ், தொழில்துறை பிரிவு ஸ்ரீராம் சங்கர்,பொருளாளர் செல்வத்துரை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் இந்திரன், மாநிலபொதுக்குழு உறுப்பினர்கள் ரவீந்திரன் மற்றும் திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.