சுவாமி விவேகானந்தர் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு துவாக்குடி மண்டல் திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய பாஜக சார்பாக துவாக்குடி வடக்கு மலை வ.உ.சி. நகர் பகுதியில் சுவாமி விவேகானந்தர் அவர்களின் திருவுருவ படத்திற்கு புஷ்பாஞ்சலி செலுத்தி இனிப்பு வழங்கி கொண்டாடபட்டது இந்த நிகழ்வுக்கு துவாக்குடி மண்டல் பாஜக தலைவர் விஜய் ஆனந்த் திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய பாஜக தலைவர் நந்தா ஆகியோர் தலைமை தாங்கினர்.
இந்த நிகழ்வுக்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இந்திரன் ராஜராஜன் மூத்த பாஜக நிர்வாகி ஜெகன் கயிலை ஜெய்நகர் கணேசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர் மற்றும் இந்த புஷ்பாஞ்சலி நிகழ்ச்சிக்கு திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய பொருளாளர் ராதாகிருஷ்ணன் கிளை தலைவர்கள் கிளை நிர்வாகிகள் சரவணன் குணசீலன் கோமதி இந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்