திருச்சி தேசியக் கல்லூரி மற்றும் எக்செல் குழுமம் இணைந்து தென்னிந்திய அளவிலான எக்செல் கோப்பை என்ற பெயரில் ஐவர் கால்பந்துப் போட்டி இன்று தேசிய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடத்தப்பட்டது. மாணவர்கள் விளையாட்டை வாழ்க்கையில் ஒரு அங்கமாக திகழச் செய்யவும், வளர்ந்து வரும் இளம் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் பொருட்டு
தேசிய கல்லூரியும், எக்செல் குழுமத்தின் அங்கமான எக்செல் அறக்கட்டளையும் கடந்த மார்ச் மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் தொடர்ந்து இதுபோன்ற விளையாட்டு போட்டிகளை நடத்தி இளம் வீரர்களை அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவதற்கு வழி வகைகள் செய்யப்பட்டு
முதலாக 13 வயதிற்கு உட்பட்டவர்களுக்கும், 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்குமான தனித்தனிப் போட்டிகள் நடைபெற்றன.64 அணிகள் இப் போட்டியில் பங்கேற்றன. பல்வேறு பள்ளிகள், விளையாட்டு சங்கங்கள், நிறுவனங்கள் உள்ளிட்ட அமைப்புகளிலிருந்து ஏறத்தாழ ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர். கல்லூரிச் செயலர் ரகுநாதன் துவக்க விழாவிற்குத் தலைமை தாங்கினார்.
எக்செல் குழும நிறுவனங்களின் தலைவரும், ரோட்டரி முன்னாள் ஆளுநருமான முருகானந்தம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று விளையாட்டு வீரர்களுக்கு உற்சாகமூட்டும் வண்ணம் பேசினார். முன்னதாக கல்லூரியின் துணை முதல்வர் பிரசன்ன பாலாஜி வரவேற்றார்.