திருச்சிராப்பள்ளி கலையரங்கில் தோட்டக்கலை -மலைப்பயிர்கள் துறையின் சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் மாவட்ட அளவிலான தென்னை சாகுபடி மற்றும் சாகுபடிக்கு பிந்தைய தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் இன்று தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
முன்னதாக தோட்டக்கலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை பார்வையிட்டு தென்னை சாகுபடி மற்றும் சாகுபடிக்கு பிந்தைய தொழில்நுட்பம் குறித்த கையேட்டினை வெளிட்டார். இந்நிகழ்வில் வேளாண்மை துறை இணை இயக்குநர் வசந்தா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் சரண்யா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெயராணி, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் கந்தசாமி, தோட்டக்கலைத்துறை அலுவலர்கள், கல்லூரி பேராசிரியர்கள், விவசாய பெருங்குடி மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.