கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் திருச்சி மாவட்ட ஸ்ரீரங்கம் டைனமிக் சிலம்பம் ஸ்ட்ரீட் ஃபயிட் சிலம்பம் அகடாமி மாணவர்கள் தங்கம் பதக்கம் வென்று முதலிடம் பெற்றுள்ளனர். தேசிய அளவில் தங்க பதக்கம் வென்ற வீரர்களை பெருமைப்படுத்தும் விதமாக பாராட்டு விழா ஸ்ரீரங்கத்தில் நேற்று நடந்தது.
விழாவிற்கு கராத்தே மற்றும் சிலம்பம் மாஸ்டர் உமாராணி தலைமை வகித்தார். விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக வழக்கறிஞர் கராத்தே முத்துக்குமார், தொழிலதிபர் ஜெயகர்ணா, ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் ராம்குமார், கண்ணையன் ராஜா, செந்தில்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவியருக்கு பதக்கம், சான்றிதழ் மற்றும் கோப்பைகளை வழங்கி கௌரவித்தனர்.
முன்னதாக ஸ்ரீரங்கம் டைனமிக் சிலம்பம் ஸ்ட்ரீட் ஃபயிட் சிலம்பம் அகடாமி கராத்தே மற்றும் சிலம்ப மாஸ்டர் உமாராணி கூறுகையில்: பாரம்பரிய கலையான சிலம்பம் கலை உலக அளவிலான போட்டியில் பங்கேற்ற 29 குழந்தைகளுக்கும் தமிழக அரசினால் வழங்கப்படும் சலுகைகள் பெற்று தருவதற்கு மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்ய வேண்டும்,
இப்பயிற்ச்சியில் வெற்றி பெற்ற 5 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தந்தை இல்லாத குழந்தைகள் மிகவும் ஏழ்மை சூழ் நிலையில் உள்ளதால் இது போன்ற குழந்தைகளுக்கும் மாவட்ட ஆட்சியர் சிறப்பு கவனம் எடுத்து அரசு சார்ந்த உதவிகள் பெற்றுத்தர உதவிட வேண்டும் என்றார்.முடிவில் மகேந்திரன் நன்றி கூறினார்.