ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையேயான 68வது தடகள விளையாட்டு போட்டியில் 400 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் தேசிய அளவில் 3ம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்ற திருச்சியை சேர்ந்த பள்ளி மாணவிக்கு திருச்சி ரயில் நிலையத்தில் காவேரி ஸ்போர்ட்ஸ் அகடமி மாற்றம் அமைப்பு மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் பாராட்டு மற்றும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஜார்கண்ட் மாநில அரசு ஸ்போர்ட்ஸ் பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில் தேசிய அளவில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இடையேயான 68 வது தடகள விளையாட்டு போட்டி நடைபெற்றது .

இப்போட்டியில் 14 வயதினருகளுக்கு இடையேயான 400 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பள்ளி மாணவி தேவிகா தங்கம் வென்று முதல் இடத்தையும் மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பள்ளி மாணவி ஜானவி வெள்ளி பதக்கம் வென்று இரண்டாம் இடம் பிடித்தனர் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 8ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவி கிருத்திகா தேசிய அளவில் 3ம் இடம் பிடித்து வெண்கலம் வென்றார் . இப்போட்டிகள் முடிந்து திருச்சிக்கு வருகை புரிந்த பள்ளி மாணவி எஸ். கிருத்திகாவுக்கு திருச்சி ரயில் நிலையத்தில் காவேரி ஸ்போர்ட்ஸ் அகடமியின் சார்பிலும் மாணவியின் பயிற்ச்சியாளர் முனியாண்டி அவர்கள் தலைமையில் மாற்றம் அமைப்பு மற்றும் பல்வேறு சமூக நல அமைப்புகளின் நிர்வாகிகள் சார்பிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஒயிட் ரோஸ் பொதுநல அமைப்பின் தலைவர் சங்கர், அமிர்தம் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் யோகா விஜயகுமார், சாக்ஸிடு தொண்டு நிறுவனத்தின் குடும்ப நல ஆலோசகர் சசி, அப்துல்கலாம் டிரஸ்ட் நிர்வாகி முத்து செல்வி, சமூக செயற்ப்பாட்டாளர்கள் கோவிந்தசாமி, ராதாகிருஷ்ணன், ஆர்ம்ஸ்ட்ராங், ராபி சாலை தீ விபத்து பாதுகாப்பு வாகன விழிப்புணர்வு பிரச்சாரளர் சீனிவாச பிரசாத் , தின சேவை அறக்கட்டளை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தின் தலைவர் சிவபிரகாசம் கண்ணன்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்