திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் வட்டாரம், அம்மன்குடி களத்தில் காந்திகிராம கிராமிய பல்கலைக் கழகத்தில் வேளாண்மை இறுதியாண்டு பயிலும் மாணவிகள் சிந்து, வீரபத்மஶ்ரீ, தரஷினி, சாட்லா திவ்ய வாணி ஆகியோர் தேசிய ஊட்டச்சத்து வாரம்- 2023ஐ முன்னிட்டு சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியினை நடத்தினர்.
இந்நிகழ்ச்சியில் அந்தநல்லூர் ஊராட்சி துணை தலைவர் கார்த்திக், வேளாண் அதிகாரி பிரியதர்ஷினி, தோட்டக்கலை அதிகாரி நடராஜன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் சௌந்தர்யா, வார்டு உறுப்பினர் சுதா மற்றும் ஊர்ப் பொதுமக்கள் பங்கேற்றனர்.
இதில் தேசிய ஊட்டச்சத்து வாரத்தின் முக்கியத்துவம், சர்வதேச சிறுதானிய ஆண்டின் முக்கியத்துவம், சிறுதானிய உணவு முறை மற்றும் அதன் நன்மைகள் குறித்து விளக்கினர். மேலும், இந்த தேசிய ஊட்டச்சத்து வாரத்தின் மகத்துவத்தை உணர்த்தும் விதமாக நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் கேழ்வரகு கூழ் வழங்கினர்.