தேசிய சிறுபான்மையினர் மக்கள் இயக்கம் சார்பில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே மத்திய அரசு மற்றும் மணிப்பூர் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தேசிய தலைவர் ஜோயல் சுந்தர் சிங் தலைமை வகித்தார் இதில் மணிப்பூர் மாநிலத்தின் திறமையற்ற பாஜக அரசின் சூழ்ச்சியினால் ஏற்பட்ட கலவரத்தால் வாழ்விலந்து வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் கொக்கியினை கிறிஸ்தவ மக்களுக்கு உடனடியாக வாழ்வாதாரத்தை திரும்ப கொடுக்க வேண்டும்
உயர்நீதிமன்ற நீதி அரச தலைமையில் கலவரத்திற்கு காரணமானவர்களை கண்டறிந்து நீதி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் பாசிச பாஜக அரசு தன் மதவாத போக்கை மாற்றிக் கொள்ளாவிட்டால் இந்திய வரலாற்றின் மோசமான ஆட்சி கட்சி என்று பதிவு செய்யப்படும் என்று விரைந்து மணிப்பூர் கலவரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
உள்ளிட்ட பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினர் இதில் தேசிய பொதுச்செயலாளர் வனிதா மகேந்திரன் தேசிய செயலாளர் பிரசாந்த் தேவசித்தம் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்