தைப்பொங்கல் என்பது தமிழர்களின் அறுவடை திருவிழாவாகும். இது தமிழர்களால் நான்கு நாட்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இது தமிழ் மாதமான தையில் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை சூரியனுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. இது வட இந்தியாவில் மகர சங்கராந்தியாகக் கொண்டாடப் படுகிறது. இந்தியா முழுவதும் இந்த பண்டிகை பல்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை போகியுடன் துவங்கியது, போகியன்று மக்கள் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதன் அடிப்படையில் வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரிக்கிறார்கள்.
இன்று தை முதல் பொங்கல் பண்டிகைக் கொண்டாடப்படுகிறது. ஆடி மாதம் தேடி விதை என்பதற்கு ஏற்ப, ஆடி மாதம் விதைத்த நெல் தை மாதத்தில் அறுவடைக்கும் வந்துவிடும். அந்த புதுநெல்லைப் போட்டு பொங்கலிடுகிறார்கள். அந்தப் பொங்கலை உழவுத்தொழிலுக்கு துணை நின்ற சூரியனுக்கும், இயற்கைக்கும் படையிலிட்டு வணங்குகினர். அந்த வகையில் திருச்சி மாவட்டம் முழுவதும் பொங்கல் பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடி வருகிறார்கள். குறிப்பாக திருச்சி மாநகர் பகுதி வாசன் நகரில் அதிகாலை முதலே பெண்கள் வண்ணக் கோலம் மட்டும் பொங்கல் பானை வைத்து சூரிய பகவானை வழிபட்டும் பொங்கலை கொண்டாடினர். குறிப்பக வெளிநாட்டில் கணவர் இருந்தாலும் காணொளி மூலமாக இணைந்து புதுமண தம்பதியினர் தை பொங்கலை குடும்பத்துடன் கொண்டாடியது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.