திருச்சி சந்துகடை அருகே சௌந்தர பாண்டியன் பிள்ளை தெருவில் ஜோசப் என்பவர் வாடகை வீட்டில் குடியிருந்து கொண்டு நகை பட்டறை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு திருச்சி EB ரோடு பகுதியில் உள்ள வேதாத்திரி நகரில் புதிதாக கட்டியுள்ள தனது வீட்டிற்கு குடும்பத்துடன் சென்று தங்கியுள்ளார். இந்நிலையில் இன்று காலை வந்து வீட்டை பார்த்த பொது வீடு , பீரோல் ஆகியவை உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 950 கிராம் தங்கம் கால்கிலோ வெள்ளி 1 லட்சத்து 50 ஆயிரம் பணம் ஆகியவை திருடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது
இதனை தொடர்ந்து ஜோசப் திருச்சி கோட்டை காவல் நிலையத்திற்கு புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வந்தது. தனிப்படையினரின் புலன்விசாரணையில் சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை பார்வையிட்டு விசாரணை செய்ததில், திருச்சி மாநகரம், கோட்டை காவல் நிலைய சந்தேக நகர் சரித்திர பதிவேடு (Suspect History Sheet) உள்ள ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்ட திருச்சி மாநகரம் கோட்டை காவல் நிலையத்தில் 8 வழக்குகளும், காந்திமார்க்கெட் காவல் நிலையத்தில் 3 வழக்குகளும், அரியமங்கலம் காவல் நிலையத்தில் 4 வழக்குகளும், ஏர்போர்ட் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், கொள்ளிடம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கிலும் சம்மந்தப்பட்ட குற்றவாளி பரணி குமார், வயது 22,
இதேபோல் திருச்சி மற்றும் திருச்சி மாநகரம் கோட்டை காவல் நிலையத்தில். ஒரு வழக்கும், காந்திமார்க்கெட் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், பாலக்கரை காவல் நிலையத்தில் ஒரு வழக்கிலும் சம்மந்தப்பட்ட குற்றவாளி சரவணன் வயது 22, என்பது தெரியவந்ததன் பேரில் மேற்படி குற்றவாளிகளை தனிப்படையினர் பல இடங்களில் தேடியும் ரகசிய விசாரணை மேற்கொண்டதில் மேற்படி குற்றவாளிகள் கோட்டை காவல் நிலைய எல்லைக்குள் இருப்பதாக தெரிந்து, அவர்களை கைது செய்தும், கருவாட்டுப்பேட்டையில் உள்ள குற்றவாளி பரணிகுமார் என்பவரின் வீட்டில் இருந்த நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேற்கண்ட வழக்கில் சிறப்பாக பணியாற்றி துரிதமாக புலன்விசாரணை செய்து குற்றவாளிகளை கைது செய்த ஸ்ரீரங்கம் சரக காவல் உதவி ஆணையர் நிவேதாலெட்சுமி மற்றும் கோட்டை குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சுலோச்சனா மற்றும் 4 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினரை திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா வெகுவாக பாராட்டி, வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.