நடிகர் ரஜினி காந்த் பிறந்த நாள் விழா மற்றும் ரஜினிகாந்த் 50-ஆம் ஆண்டு திரைத்துறை வாழ்க்கையை கொண்டாடும் விதமாக திருச்சி செந்தண்ணீர் புரம் பகுதியில் ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட நிர்வாகி மனோகர் தலைமையில் நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக திரைப்பட வினோகஸ்தர் தொழிலதிபர் பிரான்சிஸ் லூயிஸ் கலந்துகொண்டு கேக் வெட்டி , குழந்தைகளுக்கு நோட்டு, பேனா , வாட்டர் பாட்டில் வழங்கினார்
மேலும் போது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி 1000 பேருக்கு வான்கோழி பிரியாணி, சிக்கன் கிரேவி, முட்டையுடன் கூடிய மதிய உணவை அன்னதானமாக வழங்கினார். இந்நிகழ்ச்சியில்ரஜினிகாந்த் தலைமை ரசிகர் மன்ற மாவட்ட செயலாளர் எம். கலில், மாவட்ட துணை செயலாளர் வழக்கறிஞர் சுதர்சன், மற்றும் ரஜினி ரசிகர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்