தமிழ்நாடு தையல் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் இரத்தம் கோரிக்கைகளை வலியுறு த்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் அருகே மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ஹகீல் அஹமது மாநில பொருளாளர் அர்ஜுனன் மாநில துணைத்தலைவர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளாக:- அனைத்து மாவட்டங்களிலும் இருக்கும் பதிவு பெற்ற தையல் தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி வாரியம் மூலம் இலவச மனை பட்ட 3 சென்ட் இடம் வழங்கக் கோரியும்,
55 வயது பூர்த்தி அடைந்த தையல் தொழிலாளர்களுக்கு நல வாரியம் மூலமாக மாதம் ரூபாய் 5000 ஓய்வூதியம் வழங்க கோரியும், அதேபோல் தையல் தொழிலை மட்டும் நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பங்களுக்கு குடும்பத் தலைவருக்கு ஏதேனும் விபத்து அல்லது இயற்கை மரணம் ஏற்பட்டால் நலவாரியம் மூலமாக 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யக் கோரியும், தையல் தொழிலாளர்களுக்கும் நலிவுற்ற பெண்களுக்கும் இலவச தையல் மிஷன் நல வாரியத்தின் மூலம் வழங்க கோருவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.