திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் என்ஐடி-யில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநரும், புதுச்சேரியின் துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் இன்று மதியம் சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு வருகை புரிந்தார். அவரை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், காவல் துறை கமிஷனர் சத்திய பிரியா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
அதனைத் தொடர்ந்து தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் :
இரவல் ஆளுநர் என்று புதுவை எம்.அல்.ஏ விமர்சனம் கூறி இருப்பது குறித்த கேள்விக்கு : நான் இறவல் ஆளுநராக பணியாற்ற வில்லை இரக்கம் மிகுந்த ஆளுநராக தான் பணியாற்றி வருகிறேன். திமுகவை சேர்ந்த சகோதர சகோதரிகள் புதுவையில் என்னை பாராட்டினார்கள் ஏனென்றால் என்னுடைய முழுமையான உரை ஒரு மணி நேரம் இருந்தது.
நீங்கள் எப்படி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு வருவீர்கள் என்று என்னை ட்விட்டரில் கேட்கிறார்கள் :- நீங்கள் வேண்டுமென்றாலும் சரி வேண்டாம் என்றாலும் சரி தமிழகத்திற்கு நான் வருவதை யாராலும் தடுக்க முடியாது – தமிழகத்திற்கு தமிழிசை வந்து கொண்டு தான் இருப்பேன்.