நீட் தேர்வில் நடைபெறும் குளறுபடிகளை கண்டித்து திருச்சி தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் (SFI) இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் சூர்யா தலைமையில் இன்று நடைபெற்றது இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அமைப்பினர் நீட் தேர்வு குளறுபடிகள் நடைபெறுவதை கண்டித்தும்,
பிரதமர் மோடியை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு திருச்சி தலைமை தபால் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பி வேலியை தாண்டி உள்ளே செல்ல முயன்றனர் அப்போது அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இதனால் அங்கு காவல் துறையினருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு காவல் துறையைச் சார்ந்த ஒருவருக்கு கையில் காயம் ஏற்பட்டது,மேலும் மாணவர்கள் அமைப்பினர் தலைமை தபால் நிலையம் முன்பு உள்ள சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல் துறையினர் கடும் போராட்டத்திற்கு பிறகு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து வேனில் ஏற்றினர். இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட வைரவளவன் புறநகர் மாவட்ட தலைவர் ஆமோஸ் புறநகர் மாவட்ட செயலாளர் ஹரி பிரசாத் மாநகர் மாவட்ட துணைச் செயலாளர்
மாவட்ட உறுப்பினர்கள் ஆர்த்தி , மாரியம்மாள் உட்பட அனைவரும் கைது செய்யப்பட்டனர், இந்தப் போராட்டத்தால் தலைமை தபால் நிலையம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தபால் நிலையத்திற்கு வந்த பொதுமக்கள் அச்சத்துடன் காணப்பட்டனர்