தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக திருச்சி மாவட்டம் செங்குளம் காலனியில் ரூபாய் 1.75 கோடி மதிப்பீட்டில் நீர்வளத்துறையின் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள தரக்கட்டுப்பாடு கோட்டம் மற்றும் உபகோட்ட அலுவலகக் கட்டிடத்தை திறந்து வைத்தார். திருச்சி செங்குளம் காலனியில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார். திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்து புதிய அலுவலக கட்டடத்தினை பார்வையிட்டனர்.தமிழ்நாடு அரசின் 2021-22ஆம் ஆண்டு நீர்வளத்துறை மானியக்கோரிக்கை அறிவிப்பின்படி நீர்வளத்துறை அமைச்சர் அவர்களால் திருச்சியில் நீர்வளத்துறை. தரக்கட்டுப்பாடு கோட்ட அலுவலகம் மற்றும் தலைமையிட உபகோட்ட அலுவலகம் கட்டும் பணி ரூ.1.75 கோடி மதிப்பீட்டில் கட்டுவதற்கு அறிவிக்கப்பட்டு தமிழ்நாடு அரசால் அரசாணை வெளியிடப்பட்டது.

இந்த தரக்கட்டுப்பாடு கோட்டம் மற்றும் உபகோட்ட அலுவலகக் கட்டிடம் தரைத்தளம் மற்றும் முதல்தளத்துடன் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தின் தரைத்தளத்தில் மொத்தம் 11 அறைகள் கொண்டதாகவும், முதல் தளத்தில் மொத்தம் 10 அறைகள் கொண்டதாகவும். ஆக மொத்தம் இரண்டு தளங்களைச் சேர்த்து மொத்தம் 21 அறைகள் கொண்டதாக கட்டப்பட்டுள்ளது. இந்நிகழ்வில், மண்டலத்தலைவர் மதிவாணன், நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் தயாளகுமார், கண்காணிப்பு பொறியாளர் சிவக்குமார். செயற்பொறியாளர் புகழேந்தி, உதவி செயற் பொறியாளர்கள் மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்