இந்தியாவின் முதல் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு. இவர் பண்டிட் நேரு மற்றும் பண்டிதர் நேரு என்றும் அழைக்கப் பெற்றார். இவர் குழந்தைகள் மேல் மிகவும் அன்பு கொண்டவர். இவர் பிறந்தநாள் அன்று இந்தியாவில் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 134 வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே அமைந்துள்ள முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் திருஉருவ சிலைக்கு திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் மாநில துணை தலைவர் சுப சோமு, அகில இந்திய தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜான் அசோக் வரதராஜன், மாமன்ற உறுப்பினர் சோபியா விமலா ராணி, மகிளா காங்கிரஸ் ஷீலா செலஸ், கோட்டத்தலைவர்கள் ராஜா டேனியல் ராய், பிரியங்கா பட்டேல்,மகிளா காங்கிரஸ் ஷீலா செலஸ், காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.