பக்ரீத் பண்டிகை, உலகமெங்கும் உள்ள இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகிறது. இறைவனின் தூதரான இப்ராஹிம் நபிகளாரின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக கொண்டாடப்படுகிறது.
இப்ராஹிமின் தியாகத்தை நினைவு கூரும் வகையில், இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகைகள் நடத்துவதோடு இந்த நாளில் புத்தாடை அணிந்தும், தங்கள் வீட்டிகளில் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை இறைவனின் பெயரால் பலியிட்டு அவற்றை மூன்று சம பங்குகளாக பிரித்து, ஒரு பங்கை அண்டை வீட்டாருக்கும், நண்பர்களுக்கும் மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டு மூன்றாவது பங்கை தங்கள் தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனர்.
அந்த வகையில் இன்று திருச்சி மாரிஸ் பாலம் அருகே உள்ள கபூர் பள்ளிவாசல் ஈத் கா பள்ளி மைதானத்தில் அப்துல் ஹமீத் தலைமையில் ஹாஜி மொய்தீன் அஷ்ரத் முன்னிலையில் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஒன்றிணைந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக் பக்ரீத் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டன
ர்.