திண்டுக்கல் மாவட்டம் நந்தவன்பட்டியில், கடந்த 2012 ம் ஆண்டு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனரான பசுபதி பாண்டியனின் வீட்டில் வைத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் தூத்துக்குடியை சார்ந்த சுபாஷ் பண்ணையார் உட்பட 18 பேர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, இவ்வழக்கு தொடர்பான விசாரணை திண்டுக்கல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய நந்தவனப்பட்டி பகுதியை சார்ந்த நிர்மலா தேவி (வயது 60), இன்று அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கடந்த 22 ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். திண்டுக்கல்லில் உள்ள செட்டிநாயக்கன்பட்டி இ.பி காலனி டேவிட் நகர் பகுதி அருகே கொலை செய்து, தலையை தனியாக வெட்டியெடுத்து பசுபதி பாண்டியனின் வீட்டில் போட்டுவிட்டு மர்ம கும்பல் தப்பி சென்றது.
வழக்கறிஞர் பொன் .முருகேசன் மூலமாக திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் அதிகாரிகள், நிர்மலா தேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலையாளிகளை தேடுவதற்கு தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை போலீசார் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய நிர்மலாதேவி என்கிற பெண் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளிகளான அலெக்ஸ் பாண்டியன், ரமேஷ் குமார், சங்கிலி, தமிழ் செல்வம், முத்துமணி ஆகிய 5 பேரை வழக்கறிஞர் பொன் முருகேசன் மூலமாக திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 4 நீதிபதி குமார் முன்பு சரணடைந்தனர். அதனைத் தொடர்ந்து வருகிற 28-ம் தேதி வரை முசிறி சிறையில் அடைக்க நீதிபதி குமார் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து சரணடைந்த குற்றவாளிகள் 5 பேரும் திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு முசிறி சிறையில் அடைக்கப்பட்டனர்.