திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருச்சி மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலை சீரமைப்பு பணிகள், பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள்.குடிநீர் பிரச்சினை, தெரு நாய்கள் தொல்லை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் நகரப்பொறியாளர் சிவபாதம், மண்டலத் தலைவர்கள் ஆண்டாள் ராம்குமார், மதிவாணன் , துர்காதேவி,ஜெய நிர்மலா விஜயலட்சுமி கண்ணன்மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி துணை ஆணையர்கள், செயற்பொறியாளர்கள் , உதவி ஆணையர்கள் , உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.
மாநகராட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்:-
மாநகராட்சி கூட்டத்தில் திருச்சி பஞ்சப்பூரில் உள்ள பசுமை பூங்காவளாகத்தில் ரூ96.30 கோடியில் காய்கறி சந்தை வளாகம் அமைக்கும் பணிக்கு தேவையான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இப்பணிக்கு நிதியினை அரசிடம் இருந்து பெற்று பணியை மேற்கொள்வதற்கு நிர்வாக அனுமதியும் அரசிடம் இருந்து பெறுவதற்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.பஞ்சப்பூரில் ஏற்கனவே ஒருங்கிணைந்த பஸ் நிலையம்,லாரிகள் நிறுத்துமிடம், பன்னோக்கு வசதிஅலாரம் ஆகியவை கட்டப்பட்டு வருகின்றன.இப்போது அதே பகுதியில் மொத்த காய்கறி சந்தை வளாகம் அமைக்கப்பட உள்ளது என்பது உள்ளிட்ட 89 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.