திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் மேயர் அன்பழகன் பேசியதாவது:-திருச்சி மாநகராட்சியில் நிலுவையில் உள்ள வரி மற்றும் வரியில்லா இனங்கள் நிலுவையின்றி வசூல் செய்யப்பட்டு, கீழ்க்கண்ட பணிகள் பொதுநிதியின் கீழ் மேற்கொள்ள உத்தேசிக்கப் பட்டுள்ளது.அதன்படி நீதிமன்றம் முதல் விமான நிலையம் வரை புராதன தெருவிளக்குகள் ரூ.10.00 கோடி மதிப்பீட்டில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் வெஸ்ட்ரி பள்ளி அருகிலும் மற்றும் அலெக்சாண்டிரியா சாலையிலும் இடவசதிக்கேற்ப சாலையோரப் பூங்காக்கள் தலா ரூ.1 கோடி மதிப்பீட்டில், மொத்தம் ரூ.2.00 கோடி செலவில்அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் கோட்டத்திற்கு ஒன்று வீதம் 5 கோட்டங்களிலும் உணவுத் தெரு (தலா ரூ.1.00 கோடி மதிப்பீட்டில், மொத்தம் ரூ.5.00 கோடி மதிப்பீட்டில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வெள்ள பாதுகாப்பு உந்து நிலையங்கள், வெள்ள அபாயமுள்ள 5 இடங்களில் மொத்தம் ரூ.10.00 கோடி மதிப்பீட்டில், தலா ரூ.2.00 கோடி வீதம், கட்டுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கீழ்க்கண்ட பணிகள் மாண்புமிகு நகர்ப்புற அமைச்சர் அவர்கள் வழியாக அரசிடம் உரிய நிதியுதவி பெற்று மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படும் பஞ்சப்பூர் பகுதியில் சுமார் ரூ.115.00 கோடி மதிப்பீட்டில் 19.20 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி சக்தியில் மின்சாரம் தயாரிக்கும் மையம் கட்டுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு நேர அன்பழகன் பேசினார்.பிறகு மேயர் அன்பழகன் யிடம் பட்ஜெட்டில் 128.95 கோடிபற்றாக்குறை ஏற்பட்டுள்ளது இதனை மாநகராட்சி எப்படி சமாளிக்கும் என்பது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு திருச்சி மாநகராட்சிக்கு வரவேண்டிய வரி பாக்கி மற்றும் நிலுவை தொகைகளை வசூல் செய்து பற்றாக்குறையை சரி செய்வோம் என்று கூறினார்.