தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வு தின சங்கத்தின் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஓய்வூதியர்கள் பட்டை நாமம் போட்டு தலைவிரி கோலத்தில் மடியந்தி பிச்சை எடுக்கும் போராட்டம் மாவட்ட தலைவர் சவரிமுத்து தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் வளனரசு ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து கண்டன உரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையாக கடந்த தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதியாக 313ஐ கொடுக்க காலதாமதம் ஏற்படுத்தி வரும் அரசின் கவனத்திற்கும், அதேபோல் சிறப்பு பென்ஷன் ரூபாய் 6750 வழங்கிட கோரியும் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி 2.57 காரணியால் பென்ஷன் மற்றும் ஊதியத்தை திருத்தி அமைத்திட கோருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் பட்டை நாமம் போட்டு தலைவிரி கோலத்தில் மடியின்றி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தால் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.