திருச்சி கருமண்டபம் பகுதியில் கொரோனா நோய் தோற்று அதிகம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு மருத்துவ தொகுப்பு வழங்கும் நிகழ்வின் தொடக்கவிழா இன்று நடந்தது. இந்த விழாவில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு, கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தடுப்பு மருத்துவ தொகுப்பினை சத்துணவு பணியாளர்களுக்கு வழங்கினர்.