தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சிணங்கள் சங்கம் சார்பில் 25 ஆண்டுகள் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கல்வி அளிக்கும் சிறப்பு பயிற்றுநர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்றது இதற்கு மாநில தலைவர் சேதுராமன் தலைமை வகித்தார். ஒருங்கிணைந்த பள்ளி கல்வியில் உள்ளடக்கிய கல்வி கூறி தொடக்க உயர்தொடக்க கல்வி நிலை மாற்றுத் திறன் மாணவர்களுக்கு கல்வி பயிற்சி அளித்து பணிபுரிந்து வரும் சிறப்பு பயிற்றுநர்களை கடந்த 25 ஆண்டுகள் பணி சேவையை கருத்தில் கொண்டு
கால முறை ஊதியத்தில் பணி நிரந்தரம் செய்திட வேண்டும். இபிஎப் மருத்துவ விடுப்பு இஎஸ்ஐ பணி தளத்தில் ஏற்படும் விபத்து மரணங்களுக்கு நிவாரணம் இல்லை என்றும் 2015 ஆம் ஆண்டு பள்ளிகளில் இணைக்கப்பட்டது போல் பணி ஆணை வழங்கப்படவில்லை எனக் கூறியும். மேலும் 2012 ஆம் ஆண்டு முதல் அரசின் நேரடி கட்டுப்பாட்டில் பணிபுரிந்து வரும் தங்களுக்கு அரசின் மூலமாக பணி ஆணை அன்று முதல் இன்று வரை பணியாற்றி வருவதாகவும் தங்களுக்கு தற்போது உள்ள தமிழக அரசு பணியாணை வழங்க வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காண தீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் இதில் சுமார் பெண் ஆசிரியர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.