அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க திருச்சி மாநகர் மாவட்டம் பாலக்கரை பகுதி கழகம் சார்பில் திருச்சி வரகனேரி பகுதியில் அதிமுக பூத் செயலாளர்கள் மற்றும் கழக வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்துவது குறித்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் தலைமையில் இன்று நடைபெற்றது. முன்னதாக பாலக்கரை பகுதி செயலாளர் ரோஜர் வரவேற்பு ஆற்றினார். கவுன்சிலர் அரவிந்தன் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் சசிகுமார், ஐடி விங்ஸ் மாவட்ட செயலாளர் வெங்கட் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தார்.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்:- அதில் பல்வேறு சோதனைகள் அவமானங்கள் இடர்பாடுகள் அத்தனையும் தாண்டித்தான் அம்மா வெற்றி பெற்று ஜெயித்து காண்பித்தார்கள் அவர்களுடைய தனிப்பட்ட உழைப்பு இன்றைக்கு நம்முடைய பொதுச் செயலாளர் பல்வேறு சோதனைகள் பொறுப்புக்கள் வழக்குகள் விமர்சனங்கள் ஒத்துழையாமை கூட்டணி பல்வேறு பிரச்சனைகள் பத்திரிக்கையிலே பல்வேறு விமர்சனங்கள் இதெல்லாம் தாண்டி இன்னைக்கு அம்மா வழியில் ஒரு நல்லாட்சி வரவேண்டும் என்பதற்காக அந்த ஒரு நபர் மட்டும் உழைத்தால் போதாது நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என பேசினார். இதில் பாலக்கரை பகுதி வட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.