பள்ளிகள் திறப்பதை குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ளது. அதன்படி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும், பணியாளர்களும் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி செலுத்திய ஆசிரியர்கள், பணியாளர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. திருச்சி மாவட்டத்திலும் கொரோனா தடுப்பூசி செலுத்திய ஆசிரியர்கள் விவரங்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது, என்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளிகள் திறக்கபட்டாலும் அவற்றை தொடர்ந்து ஆய்வு செய்வதற்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தமிழக அரசு கூறிய வழிகாட்டுதலையும், விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா மாணவ-மாணவிகளுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை பள்ளி நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளதா என்பதை கண்காணிக்க அரசு தரப்பில் குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.
அதன்படி திருச்சி சேவா சங்கம் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் மேற்கு தாசில்தார் ரமேஷ் தலைமையில் மண்டல துணை வட்டாட்சியர் தங்கராஜ், கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். மேலும் மாநில அரசு கூறிய வழிகாட்டுத்தலை பின்பற்றாத பள்ளிகள் மீது நடவடிக்கைகள் எடுக்கபடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.