திருச்சி கலெக்டர் சாலை பகுதியில் உள்ள சங்கம் ஹோட்டலில் தமிழ்நாடு சி.பி.எஸ்.சி கூட்டமைப்பு சார்பாக ஆண்டு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தனியார் பள்ளிகளின் இயக்குனர் குருசாமி, சிபிஎஸ்சி மண்டல அலுவலர் பியூஸ்.கே.ஷர்மா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மேலும் ஜி எஸ் டி ஆலோசகர் நடன கோபால் சிறப்புரையாற்றினார். இந்த கூட்டத்தில் மாநில அளவில் சிபிஎஸ்சி பள்ளி நிர்வாகிகள் மற்றும் பள்ளி முதல்வர்கள் ஏராளமான பங்கேற்றனர். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கூட்டமைப்பின் தலைவர் மனோகரன், செயலாளர் அசோக் குமார் ஆகியோர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூட்டத்தில் நிர்வாகம் மற்றும் பல்வேறு பிரச்சனைகளை குறித்து ஆலோசிக்கப்பட்டது. பள்ளிக்கல்வி இயக்குனரிடம் பள்ளி பதிவு குறித்த கேள்விகளை குறித்தும், வெளி மாநிலத்திலிருந்து தமிழகம் வரும் மாணவர்களுக்கு தமிழ் கற்பிப்பது குறித்து, பொதுத் தேர்வில் எப்படி அணுக வேண்டும் என்றும் அலோசிக்கப்பட்டது. தொடர்ந்து சிபிஎஸ்இ மண்டல அலுவலர் பியுஸ் .கே .ஷர்மா புதிய கோட்பாடுகள் கொண்டு நடத்துவது குறித்து விளக்கி பேசினார்.
புதிய கல்வி கொள்கையை பொறுத்தவரை சிபிஎஸ்சி மத்திய கல்வி வாரியத்தின் மூலம் கிடைக்கப் பெற்ற சில அறிவிப்புகள் அதனுடைய தொடர்ச்சிகள் வேண்டிய வழிமுறைகளை குறித்து படித்துள்ளோம். மாநில அரசின் சில பரிந்துரைகளும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். முழு அளவு தற்போது புதிய கல்விக் கொள்கை அமுல்படுத்தப்படவில்லை. வரும்பொழுது இரு அரசுகளின் சார்பாக கலந்து கொண்டு அதனை எடுத்துச் செல்வோம். அரசுக்கு நீண்ட நாட்களாக பள்ளி பாதுகாப்பு சட்டத்துக்கு ஏற்ற வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளோம். இதுகுறித்து அரசிடம் தெரிவித்துள்ளோம். இதுகுறித்து பரிசீலிப்பதாக கூறியுள்ளனர். கடும் கூட்டம் இருக்கும் இடங்களில், அரசியல் கூட்டங்களில் குழந்தைகளை பெற்றோர் அழைத்துச் செல்லக்கூடாது என கூறிக் கொண்டிருக்கிறோம். இதுகுறித்து அனைத்து பெற்றோருக்கும் அறிக்கை அனுப்புவதற்காக முயற்சி மேற்கொண்டுள்ளோம் என தெரிவித்தார்.