திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் மாநில சிறுபான்மை அணி இணைச் செயலாளர் ஜாஹிர் உசேன் தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
வக்புக்கு சொந்தமான இனாம் குளத்தூர் ராவுத்தர் மார் ஜும்மா பெரிய பள்ளிவாசலில் கடந்த 2011 ஆம் ஆண்டிலிருந்து 2023 ஆம் ஆண்டு வரை நிர்வாகம் செய்த இரண்டு நிர்வாக கமிட்டியிலும் ஊழல் நடந்துள்ளதால் அதனை விசாரணை செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும், மேலும் ரகசிய தேர்தல் நடத்துவதற்கு வக்பு வாரியம் அறிவிப்பு செய்தது.
2011 ஆம் ஆண்டு 2016ஆம் ஆண்டு ஊழல் செய்த நிர்வாக கமிட்டிகள் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது ஆகவே இவர்கள் இரண்டு குரூப் மனுக்களை தள்ளுபடி செய்து. இந்த ஊழல் செய்த நிர்வாகக் கமிட்டி ஊழலை விசாரிக்க வேண்டும் என்றும் மேலும் புதிய நிர்வாகம் வரும் வரை ஜமாத்தார்களில் இருந்து மூன்று நபர் கமிட்டி அமைத்து தேர்தல் நடத்துமாறு பொதுமக்கள் மற்றும் ஆம் ஆத்மி சார்பாக திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் ஆம் ஆத்மி மாநில சிறுபான்மை இணைச் செயலாளர் ஜாஹிர் உசேன் கோரிக்கை மனு அளித்தார்.