மாநகராட்சி பகுதிகளில் 300 மீட்டர் உட்பட்ட பகுதிகளில் மதுக்கடைகள் இயங்கக்கூடாது என்கிற சட்ட விதிகளை மீறி புத்தூர் நால்ரோடு பஸ் நிறுத்தம் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கிற பகுதி, அருகிலேயே புத்தூர் பாத்திமா உயர்நிலைப்பள்ளி, பொதுமக்கள் குடியிருப்பு என்கிற நெருக்கமான பகுதியில் மதுக்கடை இயங்குவதால் தினசரி சண்டை சச்சரவுகள் ஆபாச வார்த்தைகளால் அனைவரும் பாதிக்கப்பட்டு வருவதை தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் உணர்ந்து
புத்தூர் மதுபான கடையை அகற்றக்கோரி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தென்னூர் ஹைரோடு பகுதியில் நடைபெற்ற மக்கள் திரள் கூட்டத்திற்கு மேற்குப் பகுதி குழு உறுப்பினர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். கிளைச் செயலாளர் ரஹீம் கான், பழனி பாரதி முன்னிலை வகித்தனர் .மாமண்ற உறுப்பினர் சுரேஷ் மேற்கு பகுதி செயலாளர் சுரேஷ் முத்துசாமி துணைச் செயலாளர் முருகன் இளைஞர் பெருமன்ற நிர்வாகிகள் தர்மா, பாட்ஷா மாதர்சமேளன நிர்வாகிகள் ஆயிஷா, சுமதி, ஈஸ்வரி ஏஐடியுசி தொழிற்சங்க நிர்வாகி துரைராஜ் ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க செயலாளர் சூர்யா உள்ளிட்டோர் உரையாற்றினர். பொதுமக்கள் பலரும் பங்கேற்றனர்.