திருச்சி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் ஆர்சி மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு நடத்தினார்கள். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர்… திருச்சியில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளதால் 12 மணியிலிருந்து மூன்று மணி வரை அவசர தேவை இல்லாமல் யாரும் வெளியில் பயணிக்க வேண்டாம் கோடை காலங்களில் வெப்பம் அதிகமாக இருப்பதால் நீர் ஆகாரங்களை அதிகமாக எடுத்துக் கொள்ளுமாறு ஆட்சியர் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் திருச்சி மாவட்டத்தில் தர்பூசணி உள்ளிட்ட பழங்களில் நிறம் மாறுவதற்கு கலப்படம் செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது புகார் ஒன்று வந்துள்ளது. உணவு மருந்து பாதுகாப்புத்துறை அதிகாரிகளை சோதனை செய்ய உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.