திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் இனாம்கல்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஏழாவது வார்டில் அர்ஜின தெரு மற்றும் அருந்ததியர் பெருமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் குழந்தைகள் விளையாடும் இடங்களில் ஆக்கிரமித்து புதிதாக குளம் அமைக்கப் போவதாக அரசு அதிகாரிகள் தெரிவித்து அதற்கான பணிகள் நாளை தொடங்கப்பட உள்ளது. இதனை அடுத்து அப்பகுதியின் பொதுமக்கள் சுமார் 50 நபருக்கும் மேற்பட்டோர் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளிக்க வந்தனர். முன்னதாக கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள தேசியக்கொடி கம்பத்தின் முன் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட இனாம்கள் பாளையம் பகுதியில் சுமார் 10 ஏக்கருக்கு அளவிலான குளம் ஏற்கனவே உள்ளது.அந்த குளத்தை சீர் செய்யாமல் புதியதாக குளம் வெட்ட அரசு அதிகாரிகள் முற்பட்டு வருகின்றனர்.இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.ஏற்கனவே உள்ள குளத்தை தூர்வாரி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் விளையாட்டுக்கு பயன்படுத்தி வரும் இடத்தில் குலம் வெட்டக்கூடாது புதிதாக வெட்டப்படும் குளம் குடியிருப்பு அருகே உள்ளதால் ஏற்கனவே ஒரு குழந்தை பள்ளத்தில் விழுந்து படு காயம் அடைந்தது இனி எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாத வண்ணம் பழைய குளத்தை தூர்வாரி செய்து அந்த இடத்தில் விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும் என அம்மனுயில் தெரிவித்து இருந்தனர்.