முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி தென்னூர் அரசமரம் பஸ் ஸ்டாப் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ரவிக் ராஜா தலைமை தாங்கினார் ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அல்லா பிச்சை தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அப்துல் சுக்கூர் புறநகர் மாவட்ட செயலாளர் முகமது இக்பால் தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளின் தலைமை கழக செயலாளர் சாதிக்க ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளாக காஷ்மீர் பல்காமில் 26 பேர் ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் திருச்சி மாநகராட்சியில் சாலைகளில் உள்ள வேகத்தடைகளில் வெள்ளைக்கோடு அடிக்கக்கூடிய ஒன்றிய அரசின் வகுப்பு சட்ட திருத்தத்தை கண்டித்தும் பாகிஸ்தான் மீது உடனடியாக போர் நடவடிக்கை எடுக்க கோருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.