காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி MP அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பாக இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்கு திருட்டு முறைகேடுகளையும், பா.ஜ.க.வுக்கு உடந்தையாக இருப்பதை தோலுரித்து காட்டினார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்ட இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும் மாமன்ற உறுப்பினருமான ரெக்ஸ் தலைமையில், அகில இந்திய செயலாளர் கிறிஸ்டோபர் திலக், மாவட்ட பொருளாளர் முரளி ஆகியோர் முன்னிலையில் திருச்சி காந்தி மார்க்கெட் மரக்கடை பகுதியில் இருந்து காங்கிரஸ் கட்சியினர் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி இப்ராஹிம் பூங்கா வழியாக சிங்காரத்தோப்பு, மெயின் காட் கேட் சென்று அப்பகுதியில் உள்ள மகாத்மா காந்தி சிலை வரை கண்டன ஊர்வலம் சென்றனர்.. மேலும் மகாத்மா காந்தியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்வில் முன்னாள் மாவட்ட தலைவர் தொட்டியம் சரவணன், பெஞ்சமின் இளங்கோ, அமைப்புசாரா தேசிய ஒருங்கிணைப்பாளர் அப்துல் ரஹீம், மார்க்கெட் கோட்ட தலைவர்கள் மார்க்கெட் பகதுர்ஷா, மலைக்கோட்டை வெங்கடேஷ் காந்தி, வரகனேரி இஸ்மாயில், ஸ்ரீரங்கம் ஜெயம் கோபி, காட்டூர் ராஜா டேனியல் ராய், ஜங்ஷன் பிரியங்கா பட்டேல்,, அணி தலைவர்கள் முன்னாள் ராணுவ பிரிவு ராஜசேகர், மகிளா காங்கிரஸ் ஷீலாசெலஸ், இளைஞர் காங்கிரஸ் விஜய் படேல், இலக்கிய அணி ஜெயப்ரியா, சிறும்பான்மை பிரிவு மொய்தின், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.