உலக மகளிர் தினவிழாவை முன்னிட்டு பாஜக சார்பாக திருவெறும்பூர் எழில் நகரில் மகளிர் குழுக்களுடன் இனிப்பு வழங்கியும் கேக் வெட்டியும் கொண்டாடி மகளிர்களுக்கு சால்வை அணிவித்து பரிசுகள் வழங்கி கொண்டாடபட்டது. இந்த நிகழ்விற்கு பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினர் இந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மகளிர் தினத்தை பற்றி எடுத்துரைத்து பேசினார்.
அருகில் முன்னால் திருவெறும்பூர் மண்டல் பாஜக தலைவர் செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய பொது செயலாளர் பெல்.கார்த்திக் மண்டல் துணை தலைவர் சுஜாதா பிரபாகரன் மற்றும் மகளிர் குழுக்களின் தலைவி தேவகி ராஜு மற்றும் மகளிர்கள் ஏராளமனோர் கலந்து கொண்டனர்.