திருச்சி மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மகளீர் அணி சார்பில் மத்திய அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருச்சி தஞ்சை மெயின் ரோடு மகாலட்சுமி நகர் பகுதியில் உள்ள புஷ்பம் மஹாலில் நேற்று நடந்தது. இக் கூட்டத்திற்கு திருச்சி மாநகர் மாவட்ட மகளீர் அணி தலைவர் ரேகா கார்த்திக் தலைமை தாங்கினார்.
பாஜக மகளிர் அணி மாநிலத் துணைத் தலைவர் புவனேஸ்வரி திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன், மாநில செயற்குழு உறுப்பினர் பார்த்திபன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் புரட்சி கவிதாசன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அதில் கடந்த 2014ல் பிரதமராக நரேந்திரமோடி பொறுப்பேற்றபின் பாஜக ஒன்பது ஆண்டுகாலமாக நல்லாட்சி புரிந்து வருகிறது. இந்திய குடிமக்கள் அனைவருக்கும் சொந்த வீடு வழங்க வேண்டும் என்பது பிரதமரின் ஆசை. தேசிய அளவில் 3 கோடி வீடுகள் கட்டப்பட்டன. இதுவரை தமிழக மக்களுக்கு 8 லட்சம் வீடுகளை வழங்கி உள்ளதாக தெரிவித்தார்.
திருச்சி மாநகர மாவட்ட மகளிர் அணி சார்பில் நடைபெற்ற இந்த பொது கூட்டத்தில் மகளிர் அணி நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.